என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆட்டோ டிரைவர் கொலை"
சாத்தான்குளம் பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி கண்டன்(வயது40). ஆட்டோ டிரைவர். மணிகண்டன் தசரா குழுவில் இருந்தார். தசரா குழு வரவு-செலவு கணக்குகள் தொடர்பாக அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மந்திரம் மகன் மணிகண்டனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதுதொடர்பாக அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி மணிகண்டன் அங்குள்ள பஜாரில் கடையில் புரோட்டா வாங்க சென்றார். அப்போது அங்கு மந்திரம் மகன் மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் திடீரென ஆட்டோ டிரைவர் மணிகண்டனை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாசுந்தரம், சப்- இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் மற்றும் போலீசார் மந்திரம் மகன் மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் ராஜா சுந்தர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் விசாரணை நடத்தி சாத்தான்குளம் வீர இடக்குடி தெருவை சேர்ந்த பாப்புலிங்கம் மகன் முத்து என்ற இசக்கிமுத்து (20), வேல்பாண்டி மகன் நெல்லப்பா (18), மரியஜோசப் என்பவரின் மகன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் மந்திரம் மகன் மணிகண்டன், ராஜா மகன் ஷியாம் சுதர்சன் வினோ ஆகிய 2 பேரை வலை வீசி தேடி வந்தனர்.
இதனிடையே போலீசார் சாத்தான்குளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி மோட்டார்சைக்கிளில் வேகமாக வந்த நபரை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் அவர் அங்கிருந்து மோட்டார்சைக்கிளை வேகமாக ஓட்டி தப்ப முயன்றார். உடனே அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் ஷியாம் சுதர்சன் மனோ என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மந்திரம் மகன் மணிகண்டனை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். #tamilnews
பூந்தமல்லியை அடுத்த பாரிவாக்கம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மோட்டு என்கிற சத்தியகிரிராவ் (வயது30). ஷேர் ஆட்டோ டிரைவர்.
இவர் ஆவடியில் உள்ள ஒரு ஆட்டோ நிறுத்தும் இடத்தில் சங்க செயலாளராக இருந்து அங்கேயே ஆட்டோ ஓட்டி வந்தார்.
நேற்று முன்தினம் மாலை பாரிவாக்கம் கங்கையம்மன் கோவில் குளம் அருகே நண்பர்களுடன் மது அருந்திய சத்தியகிரிராவை ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் வெட்டி கொலை செய்து தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஆட்டோக்களில் சவாரி ஏற்றும் தகராறில் சத்தியகிரிராவ் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக ஆட்டோ டிரைவர்களான அம்பத்தூர் ஒரகடத்தைச் சேர்ந்த பூபாலன், சென்னீர்குப்பம் கபீர், பாலாஜி, திருமுல்லைவாயல் ஜார்ஜ் விஜய்பாபு, ஆவடியைச் சேர்ந்த அஜித் என்கிற ஜெகன்நாதன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது40). ஆட்டோ டிரைவர். இவருக்கு அம்சம்மாள் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். தற்போது அம்சம்மாள் கர்ப்பிணியாக உள்ளார். அவர் பிரசவத்துக்காக ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
மணிகண்டன் தசரா குழுவில் இருந்தார். தசரா குழு வரவு-செலவு கணக்குகள் தொடர்பாக அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மந்திரம் மகன் மணிகண்டனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதுதொடர்பாக அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் பத்திரகாளியம்மன் கோவில் தெருவில் இருந்து அருகில் உள்ள மற்றொரு தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்தார். இதனிடையே தனது மகனுக்கு மணிகண்டனால் ஆபத்து இருப்பதாக ஆட்டோ டிரைவர் மணிகண்டனின் தாய் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார்.
அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வந்ததால் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் தனது மாமனார் ஊரான ஸ்ரீவைகுண்டத்துக்கு குடும்பத்துடன் சென்று விட்டார்.
சமீபத்தில் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் மீண்டும் சாத்தான்குளத்துக்கு வந்தார். இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி அங்குள்ள பஜாரில் கடையில் புரோட்டா வாங்க சென்றார். அப்போது அங்கு மந்திரம் மகன் மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் திடீரென ஆட்டோ டிரைவர் மணிகண்டனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
அவர் அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓடினார். எனினும் அவர்கள் ஓட ஓட விரட்டி சென்று மணிகண்டனை வெட்டினர். இதில் மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே அவர்கள் 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாசுந்தரம், சப்- இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் மற்றும் போலீசார் மந்தரம் மகன் மணிகண்டன், ஷியாம், முத்து என்ற இசக்கிமுத்து, செல்லப்பா உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் ராஜா சுந்தர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் கொலையாளிகள் பேய்குளத்தில் இருந்து தப்பி செல்ல இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் இன்று காலை அவர்களை சுற்றி வளைத்தனர்.
இதில் சாத்தான்குளம் வீர இடக்குடி தெருவை சேர்ந்த பாப்புலிங்கம் மகன் முத்து என்ற இசக்கிமுத்து (20), வேல்பாண்டி மகன் நெல்லப்பா (18), மரியஜோசப் என்பவரின் மகன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் மந்திரம் மகன் மணிகண்டன், ஷியாம் ஆகிய 2 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.
சாத்தான்குளம்:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பத்திர காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது40). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி அம்சம்மாள் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். தற்போது அம்சம்மாள் கர்ப்பிணியாக உள்ளார். அவர் பிரசவத்துக்காக ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
மணிகண்டன் தசரா குழுவில் இருந்தார். தசரா குழு வரவு-செலவு கணக்குகள் தொடர்பாக அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மந்திரம் மகன் மணிகண்டனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இதுதொடர்பாக அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் பத்திரகாளியம்மன் கோவில் தெருவில் இருந்து அருகில் உள்ள மற்றொரு தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்தார்.
இதனிடையே தனது மகனுக்கு மணிகண்டனால் ஆபத்து இருப்பதாக ஆட்டோ டிரைவர் மணிகண்டனின் தாய் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வந்ததால் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் தனது மாமனார் ஊரான ஸ்ரீவைகுண்டத்துக்கு குடும்பத்துடன் சென்று விட்டார்.
சமீபத்தில் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் மீண்டும் சாத்தான்குளத்துக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் அங்குள்ள பஜாரில் கடையில் புரோட்டா வாங்க சென்றார். அப்போது அங்கு மந்திரம் மகன் மணிகண்டன் உள்ளிட்ட 3 பேர் அங்கு வந்தனர்.
அவர்கள் திடீரென ஆட்டோ டிரைவர் மணிகண்டனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதனால் அவர் அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓடினார். எனினும் அவர்கள் ஓட ஓட விரட்டி சென்று மணிகண்டனை வெட்டினர். இதில் மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
இந்த சம்பவம் காரணமாக பஜாரில் பரபரப்பும், பதட்டமும் உண்டானது. அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாசுந்தரம், சப்- இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு சாத்தான்குளம் டி.எஸ்.பி. பாலச்சந்திரன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி மணிகண்டன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிந்தனர். தப்பி ஓடி தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள பெரும்பாறை பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 27). மினி ஆட்டோ டிரைவர்.
இந்த நிலையில் பள்ளிப்பாளையத்தை அடுத்த ஈகாட்டூர் பகுதியை சேர்ந்த பெண்களும், ஆண்களும் பள்ளிப்பாளையம், வெப்படை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் இருக்கும் நூல்மில்லுக்கு தினமும் கூலி வேலைக்கு செல்வது வழக்கம். பெரும்பாலானோர் தறிப்பட்டறையிலும் வேலை பார்த்து வருகிறார்கள்.
மினி ஆட்டோவை ஓட்டுவதை விட்டு விட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தர்மராஜ் வெப்படையில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது அதே ஆலையில் பணிபுரிந்து வந்த ஈகாட்டூர் பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி முத்துக்குமார்(36) என்பவருடைய மகளுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தனர்.
இது பற்றி முத்துக்குமாருக்கு தெரியவந்தது. மகளுக்கு 17 வயதே ஆவதால், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் தர்மராஜை செல்போனில் தொடர்பு கொண்ட அந்த பெண், தங்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்து விட்டதாகவும், தன்னை கண்டித்து அடிப்பதாகவும் கூறி அழுதுள்ளார்.
இதையடுத்து காதலியை பார்ப்பதற்காக தர்மராஜ் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணிக்கு ஈகாட்டூருக்கு சென்றார். அப்போது பெண்ணின் தந்தை முத்துக்குமார் வீட்டின் வாசல் அருகே படுத்து தூங்கிக் கொண்டிருந்ததார். இதனால் தர்மராஜ் வீட்டுக்குள் செல்ல முடியாமல் அங்கும், இங்குமாக சுற்றிச் சுற்றி வந்தார். ஆள் நடமாட்டத்தை உணர்ந்த முத்துக்குமார் கண்விழித்து பார்த்தபோது, தர்மராஜ் அங்கிருந்து செல்ல முயன்றார். அப்போது அவர் போதையில் இருந்ததாக தெரிகிறது. ஏன்? எதற்கு? இங்கு வந்தாய் என கேட்டபோது, முன்னுக்குப்பின் கூறினார்.
இதனால் முத்துக்குமாரும், உறவினர்களும் சேர்ந்து மரக்கட்டையால் தர்மராஜை தாக்கினர். கை, கால், இடுப்பு, நெஞ்சு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக அடித்து, உதைத்தனர். இதில் படுகாயம் அடைந்த அவர் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்கப்பட்டார். அங்கு நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து பள்ளிப்பாளையம் போலீசார், பெண்ணின் தந்தை முத்துக்குமார் மற்றும் உறவினர்கள் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
பூந்தமல்லி:
குன்றத்தூரை அடுத்த நந்தம்பாக்கம், பாரதி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 48). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி தேவி. கட்டிட தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
ராஜேந்திரனுக்கு குடிப்பழக்கம் உண்டு. நேற்று காலை மது போதையில் இருந்த அவர் ஆட்டோ ஓட்டச் செல்லாமல் வீட்டிலேயே தூங்கினார்.
இதையடுத்து தேவி உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இரவு திரும்பி வந்தபோது வீட்டில் உள்ள அறையில் கணவர் ராஜேந்திரன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது தலையில் கல் போடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து குன்றத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கொலை நடந்த போது ராஜேந்திரனின் மகள் அருகில் உள்ள பாட்டி வீட்டுக்கும், மகன் பக்கத்து வீட்டில் உள்ள சிறுவர்களிடம் விளையாடவும் சென்றுவிட்டனர். இதனால் கொலையாளிகள் வீட்டுக்கு வந்து சென்றது எப்போது என்று தெரியவில்லை.
கொலையுண்ட ராஜேந்திரனின் முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் அவர் தேவியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இதே போல் தேவியும் முதல் கணவரை பிரிந்து ராஜேந்திரனை இரண்டாவதாக திருமணம் செய்து இருந்தார்.
கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று உடனடியாக தெரியவில்ல. பெண் தகராறில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதுதொடர்பாக தேவியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் ஒருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அவரை பிடிக்க விரைந்துள்ளனர்.
திருச்சி:
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 37), ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி மரியபுஷ்பம் என்ற மனைவியும், ஹரிஷ் (5), ஆதித்யா (7) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் செந்தில்குமார் வீட்டில் கட்டில் அருகே தரையில் விழுந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மரியபுஷ்பம் எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் செய்தார்.
அதில் நேற்று முன்தினம் ராமச்சந்திரா நகரில் டாஸ்மாக் கடை அருகே தனது கணவர் செந்தில்குமாருக்கும், சிலருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் இதில் தாக்கப்பட்டதால் அவர் இறந்து விட்டதாகவும் கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் செந்தில்குமாரின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது செந்தில்குமார் தாக்கப்பட்டதில் காயம் அடைந்து இறந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்ற உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக செந்தில்குமாருடன் தகராறில் ஈடுபட்ட அவரது நண்பர்கள் உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதிக போதையில் அவர் இறந்திருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் பலர் சேர்ந்து தாக்கியதில் செந்தில்குமார் இறந்ததாக தெரியவந்துள்ளதால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது சகோதரர் செல்வம். ஆட்டோக்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகின்றனர்.
இவர்களிடம் தளவாய்புரம் அருகே உள்ள அம்மையப்பபுரம் பகுதியைச் சேர்ந்த மாடசாமி மகன் அய்யனார் (வயது 27) என்பவர் ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்தார்.
சில வாரங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் புளியங்குடிக்கு ஆட்டோவை ஓட்டிச் சென்ற அய்யனார், அங்கு ரோட்டோரத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு அதில் இருந்து பேட்டரியை எடுத்து விற்றுவிட்டு தலை மறைவானார்.
பின்னர் மாரிமுத்துவும், செல்வமும் புளியங்குடியில் ஆட்டோ நிற்பதை கண்டறிந்து அதனை மீட்டனர்.
இது தொடர்பாக சகோதரர்கள் இரண்டு பேரும் அய்யனார் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டு எச்சரித்துவிட்டு வந்துள்ளனர்.
இதனிடையே நேற்று நடந்த தேவதானம் பெரிய கோவில் தேர்த்திரு விழாவில் பங்கேற்பதற்காக அய்யனார் வந்திருப்பதாக மாரிமுத்துவுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் அங்கு சென்றார். அப்போது அய்யனார் சேத்தூர்-தேவதானத்துக்கு இடையே உள்ள ஒரு ஒர்க்ஷாப்பில் இருப்பது தெரியவந்தது.
அங்கு விரைந்து சென்ற மாரிமுத்து, ஆட்டோ குறித்து அய்யனாரிடம் கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து மறைத்து வைத்திருந்த கத்தியால் அய்யனாரை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பினார்.
படுகாயம் அடைந்த அய்யனாரை அங்கிருந்தவர்கள் மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் அய்யனார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து சேத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மாரிமுத்துவை தேடி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்